சந்திரசேகரன் மாமா ஒரு வித்தியாசமான மனிதர். சிறிய வயதிலேயே இஞ்சினியரிங் முடித்து உயர்ந்த பதவி வகித்து 50 வயதிலேயே ரிட்டயர்டு ஆகி சொந்த ஊரில் செட்டிலாகி விட்டவர்
வாசலில் வெத்தலை செல்லத்தோடு தும்பை வைள்ளை நிற வேட்டியும் மேற்சட்டையும் அணிந்திருப்பார்.அவரை கண்டால் தெருவில் போகிறார்கள், மிரண்டு ஓடுவார்கள். அவரது அகராதியில் அச்சம் என்பதே கிடையாது. நான் வாழ்க்கையில் சந்தித்த அதிபுத்திசாலிகளில் மாமா தலையானவர்.
என் அப்பாவை அவர்தான் படிக்க வைத்தார். என் அப்பா எங்களிடம் சந்திரசேகரன்மாமாவை பற்றி அடிக்கடி சொல்லுவார். உங்கள் வாழ்க்கை அவரிட்ட பிச்சைடா என்பார் அப்பா.
நான் கோவிலுக்கு போகும் வழியில் மாமா வீட்டிற்கு தினமும் செல்வேன். மாமா இரண்டொரு வார்த்தைகள் பேசுவார்கள். வா என்பார்கள் சில சமயம் எங்கள் வயது பையன்களுக்கிடையிலான சண்டைகளை பற்றி விசாரிப்பாரகள்.
மாமா வீட்டில் ஒரு பெரிய ஊஞ்சல் இருந்தது. மாமா அதில் அமராத நேரம் நான் ஒரு அரை மணி நேரம் ஊஞ்சலாடிவிட்டு வருவேன். மாமி தங்கமானவர். எப்போதும் 'தாயினும் சாலப்பரிந்து' ஏதாவது உண்ணத்தருவார். நானும் மேற்போக்காக மறுத்து விட்டு சாப்பிடுவேன்.மாமா வீட்டில் எப்போதும் ஒரு சுகந்தமான மணம் வீசும். அவர்கள் வீட்டின் பின்புறத்தில் ஒரு நாகலிங்கப்பூ மரம் இருந்தது. அது தவிர சில பசுக்களும்.
மாமா சில சமயம் சாமவேதம் ஓதுவார்கள். நான் 1985ல் வரை சந்தித்த போது ஒரு பொதுவழ்க்கை பற்றி கூறி அதில் ஏன் இ.பிகோ AAA
சட்டத்தை அரசாங்கம் கையிலெடுக்க கூடாது என்றார்கள்.
மாமா நன்கு ஜாதகம் மற்றும் கைரேகை பார்ப்பார். என்னிடம் உனக்கு 51 வது வயதில் வேலையில் கண்டம் இருக்கிறது என்றார். ஒரு சமயம் எனது தாத்தா நாரயணய்யர் வார்டு தேர்தலுக்கு மாமாவை எதிர்த்தது தவறு என்று விளக்கினார். நான் நீங்கள் செய்ததே சரி என்றேன்.
மாமாவின் வீட்டு சக்கை வரட்டி போன்ற தின்பண்டத்தை நான் எங்கும் ருசித்ததில்லை.
மாமாவிடம் அச்சப்பட்டாலும் எத்தனையோ செய்திகளை அவர் சொல்ல கேட்டு இருக்கிறேன். மாமா ஒரு மகத்தான மனிதர். அவர் வாழ்ந்த காலத்தில் சராசரி மனிதர்களை விட அறிவிலும் அனுபவத்திலும் பல மடங்கு உயர்ந்தவர்
எப்போது மாமாவை நினைத்தாலும் கண்கள் பனிக்கிறது.அந்த வீட்டின் விசேஷ மணம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத ஒன்று.
7:59 AM
ليست هناك تعليقات:
إرسال تعليق